Categories: சினிமா

முதல் முறை சுந்தரம்.. 2-வது முறை பிரபுதேவா.. தேசிய விருதுகளை அடுத்தடுத்து தட்டி தூக்கிய பிரபலங்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் நடனத்திற்காக தேசிய விருதை வென்ற படங்கள் மற்றும் நடன இயக்குனர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கடந்த 1954-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சிறந்த படம், இயக்குனர், பாடகர், ஒளிப்பதிவு, இசை, நடனம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. நடனத்திற்காக 1991-ஆம் ஆண்டில் இருந்து தான் தேசிய விருது வழங்கப்படுகிறது.

சுந்தரம்:
கடந்த 1993-ஆம் ஆண்டு 41-வது தேசிய விருது விழாவில் நடன இயக்குனர் சுந்தரத்திற்கு விருது வழங்கப்பட்டது. திருடா திருடா படத்திற்காக சுந்தரம் மாஸ்டருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சந்திரலேகா, வீரபாண்டி கோட்டையிலே ஆகிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த பாடல்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு இசையமைத்த சுந்தரம் மாஸ்டருக்கு நடன இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.

பிரபுதேவா:
கடந்த 1997-ஆம் ஆண்டு 44-வது தேசிய விருது வழங்கும் விழாவில் பிரபுதேவாவுக்கு மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி பெண்ணே மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. இந்த பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தனது தந்தைக்குப் பிறகு நடனத்திற்காக பிரபுதேவா இரண்டாவது தேசிய விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சரோஜ் கான்:
கடந்த 2005-ஆம் ஆண்டு 53 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிருங்காரம் என்ற படத்திற்காக பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கானுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. சிருங்காரம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் சரோஜ்கான் தான் நடன இயக்குனராக வேலை பார்த்து உள்ளார். அந்த படம் சிறந்த இசை, சிறந்த நடனம், சிறந்த ஒளிப்பதிவாளர் என மூன்று விருதுகளையும் பெற்றது.

தினேஷ்:
கடந்த 2010-ஆம் ஆண்டு 58-வது தேசிய விருது வழங்கும் விழாவில் தினேஷ் மாஸ்டருக்கு ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால என்ற பாடலுக்கு நடனம் இயக்கியதற்காக விருது வழங்கப்பட்டது. ஆடுகளம் திரைப்படம் சிறந்த இயக்குனர், திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடனம் உள்ளிட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பிர்ஜு மகராஜ்:
கடந்த 2012-ஆம் ஆண்டு 60-வது தேசிய விருது வழங்கும் விழாவில் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற உன்னை காணாது என்ற பாடலுக்கு நடனம் இயக்கியதற்காக தேசிய விருது கொடுக்கப்பட்டது. கதக் நடன கலையை மையமாக வைத்து அந்த பாடலுக்கு அவர் நடனம் அமைத்திருந்தார். அந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜானி-சதீஷ் கிருஷ்ணன்:
ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணனுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த நடனத்திற்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா மற்றும் தாய் கிழவி பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேகம் கறுக்காதா பாடலுக்கு ஜானி, தாய்க்கிழவி பாடலுக்கு சதீஷ் கிருஷ்ணனும் நடனம் இயக்கியுள்ளனர்.

admin

Recent Posts

“நீதான்யா ரோஷமான மனுஷன்”…. “தவெக 30 சீட்களை தாண்டினால் மொட்டை அடிப்பேன்”…. சொன்னபடி மொட்டை அடித்த பிரசாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைத்துள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தான்…

23 seconds ago

“ஆதரவு கொடுக்கிறோம் ஆனா ஒரு கண்டிஷன்” இது நடக்கவே கூடாது.. காங்கிரஸ் வைத்த செக்.. விழிபிதுங்கி நிற்கும் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள்…

6 minutes ago

விளையாட்டு வீரர்களுக்கு இதுதான் மரியாதையா..? தங்கம் வென்றும் பலனில்லை.. ரயில் நிலையத்தில் 12 மணிநேரம் கண்ணீருடன்… சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்…!!

அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவத்தில், தங்கம் வென்ற போலந்து போல்ட் (Pole Vault) வீராங்கனை ஒருவர், தனது விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில்…

8 minutes ago

“சுக்கிரன் தரும் ‘விபரீத ராஜயோகம்’… இந்த 3 ராசிக்காரர்களுக்குக் கடும் சோதனை.. உங்க ராசி இதுல இருக்கா?”

சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், பொதுவாக சுப பலன்களைத் தரும் எனக் கருதப்பட்டாலும், 6,…

9 minutes ago

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

12 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

14 minutes ago