BREAKING: தனுஷின் ராயன் படத்திற்கு தேசிய விருது…. ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த தனுஷ்…!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் மொழிக்கான சிறந்த திரைப்படமாக தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ படம் தேர்வு செய்யப்பட்டு திரையுலகில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. ஏற்கனவே 2010-ல் ‘ஆடுகளம்’, 2019-ல் ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை வென்று முத்திரை பதித்த தனுஷுக்கு, தற்போது ‘ராயன்’ படத்தின் மூலம் மேலும் ஒரு மதிப்புமிக்க தேசிய விருது கிடைத்துள்ளது அவரது பன்முகத் திறமைக்குக் கிடைத்த சான்றாகும்.

ஒரு நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் தனது அசாத்திய திறமையை நிரூபித்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தனுஷுக்கு, சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அள்ளிக்குவித்து சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.