பிலிம் பேர்-ஐ தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய விருதையும் தட்டி தூக்கிய நித்யா மேனன்.. குவியும் வாழ்த்துக்கள்..!!

By admin on ஆவணி 16, 2024

Spread the love

பிரபல நடிகையான நித்யா மேனன் தமிழில் ஓ காதல் கண்மணி, மெர்சல், சைக்கோ, காஞ்சனா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

   

மேலும் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. அனிருத் பின் இசை படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.

   

 

இந்த படத்தில் தனுஷ் திரு கதாபாத்திரத்திலும், நித்யா மேனன் சோபனா கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். சிறு வயதிலிருந்து திரு மீது காதல் கொண்ட சோபனா அதனை வெளி காட்டாமல் இருக்கிறார். இதனை அறியாத திரு பிற பெண்களை காதலிக்கிறான். அந்த காதலும் தோல்வி அடைகிறது. தோழியாக கூடவே இருந்து திருவை ஷோபனா வழிநடத்தி செல்கிறார். கடைசியில் ஷோபனாவின் காதலை அறிந்து திரு அவருடன் எப்படி சேர்கிறார் என்பதுதான் கதை.

இந்த படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு சமீபத்தில் ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது இந்த நிலையில் 70-வது தேசிய திரைப்பட விழுதுகள் நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் வென்றுள்ளார். இதேபோல கட்ச் எக்ஸ்பிரஸ் என்னும் குஜராத்தி படத்தில் நடித்த மானசி பரேக் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.

💓THIRU💓SHOBANA💓 • ShareChat Photos and Videos