தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய நடிப்பாலும் உயரமான உடல் அமைப்பாலும் வில்லனாக கலக்கி வந்தார். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகன் தனுஷிற்கு சிறுவயதிலேயே தசை சிதைவு நோய் பாதிப்பு இருந்ததால் சினிமாவை விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக மூத்த மகன் தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணோடு ஜப்பானில் கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை அவ்வளவு அழகாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். நெப்போலியன் ஐ பொறுத்தவரை தன்னுடைய மருமகளை தங்கத்தட்டில் வைத்து தாங்காத குறை தான்.
சமீபத்தில் தான் அமெரிக்காவில் இருக்கும் வீட்டுக்கு அக்ஷயா வந்திருந்தார். அப்போது பூக்கள் தூவி அவர் வரவேற்கப்பட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. முக்கியமாக நெப்போலியன் சிறந்த தந்தை மட்டும் இல்லை மிக சிறந்த மாமனாராகவும் இருக்கிறார் என்று பலரும் புகழ்ந்து பேசினர். இப்படியான நிலையில் அமெரிக்க முறைப்படி தனுஷ் மற்றும் அக்ஷயா இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோவை நெப்போலியன் இணையத்தில் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…