“இந்த கடிதத்தை படிக்கும் யாரும் அழாதீங்க, நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்”.. உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 7 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…!

Spread the love

பெங்களூரு பனகிரி நகரில் கணேஷ் பிரசாத் (38) என்ற இசை கலைஞர் பசித்து வரும் நிலையில் இவருக்கு சபிதா (35) என்ற மனைவி உள்ளார். இவரும் கிராமிய பாடகி தான். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகன் கந்தார் (14) தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். சவிதா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்ற நிலையில் தந்தையும் பிள்ளைகளும் வீட்டிலிருந்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு கந்தார் வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்காக தன் அறைக்கு சென்று விட்டான்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் கதவை திறக்காததால் கணேஷ் கதவை தட்டினார். பிறகு பதற்றமடைந்த கணேஷ் கதவைத் தள்ளி திறந்து பார்த்தபோது கிட்டாரை தொங்கவிடும் ஆனியில் துப்பட்டாவால் தூக்கிட்டு கந்தார் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியில் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன்பு சிறுவன் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்த நிலையில் அந்த கடிதத்தில், இந்த கடிதத்தை படிக்கும் யாரும் அழாதீர்கள். தற்போது நான் சொர்க்கத்தில் இருக்கிறேன். என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். என் முடிவு உங்களுக்கு வருத்தம் அளிக்கும் என்பதை எனக்கு புரியும். இந்த வீடு நன்றாக இருக்க வேண்டும் என்பதால் நான் இந்த முடிவுக்கு வந்தேன். என் மீது யாருக்காவது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என்ற சிறுவன் குறிப்பிட்டான். சிறுவனின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியாததால் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago