Categories: சினிமா

மகன் திருமணத்திற்கு100 கோடிக்கும் மேல் செலவு செய்த நெப்போலியனின் அசர வைக்கும் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மூத்த மகனுக்கு அரியவகை தசைப்பிடிப்பு நோய் இருந்ததால் சரியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றனர்.  அங்கு நெப்போலியன் ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தார்.

பிறகு இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார். இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.  அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டு அங்கு நேற்று பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஜாம் ஜாம்னு திருமணத்தை 100 கோடி செலவில் நடத்தி முடித்தார்.

இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  இவருடைய வீட்டில் டெஸ்லா, பென்ஸ், டொயோட்டோ உள்ளிட்ட  நான்கு சொகுசுகாரர்களும் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி கார் மற்றும் தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு காரும் வைத்துள்ளாராம். குடும்பத்துடன் அவுட்டிங் செல்வதற்கு தனி வேன் ஒன்றும் உள்ளது. அதில் மகனுக்காக லிப்ட் வைத்துள்ளார் நெப்போலியன். இப்படி ராஜ வாழ்க்கை வாழும் இவருடைய சொத்து மதிப்பு 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

Soundarya

Recent Posts

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

7 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

15 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

27 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

30 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

38 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

42 minutes ago