தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நடிகராக 90களில் கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். இப்படி சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் சினிமா மற்றும் அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். நெப்போலியன் மூத்த மகனுக்கு அரியவகை தடைப்பிடிப்பு நோய் இருந்ததால் சரியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றனர். அங்கு நெப்போலியன் ஐடி கம்பெனி உருவாக்கி பல தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தார். பிறகு இந்த பொறுப்புகளை எல்லாம் மூத்த மகன் தனுஷின் கையில் ஒப்படைத்தார். இந்த நிலையில் நெப்போலியன் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரை பட்டியில் வசிக்கும் அக்ஷயா என்ற பெண்ணை தனது மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய நிச்சயத்தார்.
)
அது தொடர்பான தகவலை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில், தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டு அங்கு நேற்று பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். இந்த திருமணத்தை கோலாகலமாக தமிழ் முறைப்படி நடத்த விரும்பிய நெப்போலியன் தனது மகன் திருமணத்திற்கு வரும் பிரபலங்களின் பயண செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.திருநெல்வேலி பொண்ணை ஜப்பானில் கரம்பிடித்தார் நெப்போலியன் மகன் தனுஷ்! திருமணத்திற்கு முன்பு தனுசு உடன் அக்ஷயா வீடியோ காலில் பேசியுள்ளார். அப்படியே பேச பேச அவரை பிடித்து போய்விட்டது.

பிறகு தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நெப்போலியன் மகன் தனுசுக்கு ஜப்பானை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது. இதனால் இவர் முதலில் ஜப்பான் சுற்றி பார்க்க தான் முடிவு செய்துள்ளார். இதற்கு இடையில் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டதால் தனது திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். தனது மகனின் ஆசையை நிறைவேற்ற தான் நெப்போலியன் ஜப்பானில் திருமணத்தை வைத்துள்ளார். மகனின் திருமணத்தை ஜப்பானில் வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்திவிட்டார்.
)
திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் எப்படி நடிகர்கள் வருவார்களோ அதனைப் போலவே சில நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஜப்பான் சென்று விட்டனர். அவர்களுக்கு திருமணத்தின் போது இந்திய உணவில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நெப்போலியன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்துள்ளார். இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு நடிகை சுகாசினி அக்ஷயா மற்றும் தனுஷ் ஆகியோரிடம் ஒரு பேட்டி எடுத்துள்ளார். அதில் பல கேள்விகளை அக்ஷயாவிடம் சுகாசினி கேட்டார். தனுசு உடன் முதல் சந்திப்பு, முதல் போன் கால், நிச்சயதார்த்தம், மாமனார் மற்றும் மாமியார் சுதா என அனைவர் குறித்தும் அக்ஷயா மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார்.

அதே சமயம் இவர் போன்ற கணவர் எனக்கு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறினார். தொடர்ந்து சுகாசினி அக்ஷயாவிடம் உங்களது பெற்றோர்களை பிரிந்து அமெரிக்காவில் செட்டிலாக போகிறீர்கள், உங்கள் குடும்பத்தை எவ்வளவு மிஸ் பண்ணுவீங்க என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் மிஸ் செய்வேன், அதிலும் என் அக்கா மகளை அதிகமாக மிஸ் பண்ணுவேன் என அந்த பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது அக்ஷயாவுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அதனை கண்டதும் தனுஷ் எமோஷனல் ஆகிவிட்டார். பிறகு சுகாசினி நான் சொல்கிறேன் நிச்சயம் நீங்கள் உங்கள் குடும்பத்தை மிஸ் பண்ண மாட்டீங்க அந்த அளவுக்கு நெப்போலியன் குடும்பத்தினர் உங்களை நல்லா பார்த்துப்பாங்க என்று கூறிய நிலையில் தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
