தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் நாஞ்சில் விஜயன் . இவர் பெண் வேடமிட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவருக்கு மனைவி மரியா மற்றும் சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயன் என்னை திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று ஏமாற்றியதாக திருநங்கை வைஷு என்ற ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். சில நாட்களாக வலைத்தளத்தில் பேசும் பொருளாக செய்தி பரவி வந்தது.
அந்த புகாரில் நான் 15 வருடங்களாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். நான் நாஞ்சில் விஜயனும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம். திருமண ஆசையைக் காட்டி என்னை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி உள்ளார். அவருக்கு திருமணமாகியும் என்னுடன் பழகி வந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்று இனி நாம பழக வேண்டாம். எங்கள் வீட்டில் எப்போதும் சண்டையாகவே உள்ளது என்று கூறினார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு நீ ஒரு திருநங்கை உன்னை யாரு கல்யாணம் முடிப்பார் என்று மறுத்தார். இந்த புகாரில் எழுதி இருந்தது இதுதான்.
இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் மற்றும் மனைவி மரியாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். என் வைஷு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? என்னோட கணவரை அசிங்கப்படுத்துறீங்க, வெளியில தலையை காட்ட முடியல, எங்களுக்குள்ள பிரச்சனை வரத்துக்காக இவ்ளோ கேவலமா பழி போடாதீங்க. எனக்கும் வைஷுவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அவர ஒரு சகோதரியா தோழியா மட்டும் தான் பார்த்தேன். என் மேல அவங்க பொய்யா புகார் அளிக்கிறாங்க என்று கூறியுள்ளார்.
