திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தற்போது விஜயின் தவெகவில் இணைந்துள்ளார். சமீபகாலமாகவே திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக செங்கோட்டையன் இணைந்ததே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் , இதனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
