இனி ஸ்டாலின் இடத்தில் கனிமொழி… திமுகவிற்குள்ளேயே பல குழப்பம்… பரபரப்பை கிளப்பிய நாஞ்சில் சம்பத்..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

திமுக தலைவராவதற்கு கனிமொழி விரும்புவதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நாஞ்சில் சம்பத் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘6 மாத காலம் இந்த ஆட்சி தாங்குமா என ஸ்டாலின் கேட்கிறார். ஆனால் நீங்கள் 6 மாதங்கள் திமுகவிற்குத் தலைவராக இருக்க முடியுமா என யோசியுங்கள்’ என்று விமர்சித்துள்ளார். மேலும், திமுகவிற்குள்ளேயே தற்போது பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருவதாகவும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தத் தலைவர் இடத்திற்கு வருவதற்கு கனிமொழி ஆசைப்படுகிறார் என நாஞ்சில் சம்பத் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்து தவெக நிர்வாகி ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அதிரடியான கருத்து, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.