#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள், அக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ராசித்தனர்.
தன்னை வெற்றி நாயகனாக ஆக்கிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதல்மைச்சராக தான் இறக்கும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுப்பவர். அதேபோல் திரையில் எதிரியாக நடித்தாலும் எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அப்படி எம்ஜிஆர்க்கு வில்லனாக பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்தவர் நம்பியார். ஆனால் நிஜத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒருமுறை அரசிளங்குமாரி திரைப்படத்தில் எம்ஜிஆரும் நம்பியாரும் சண்டை போடுவது போல் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நம்பியாரின் வாள் எம்ஜிஆரின் புருவத்திற்கு கீழே பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. படக்குழுவினர் நம்பியாரை திட்டிருக்கின்றனர். எதற்காக இப்படி செய்தீர்கள் பார்த்து நடிக்க கூடாதா என்று கூறினர். நம்பியார் எதுவுமே பேசவில்லை.
பின்னர் எம்ஜிஆர் தனியாக இருக்கும்போது, நம்பியார் அவரிடம் எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். ஏன் என்று கேட்டார் எம்ஜிஆர். உடனே நம்பியார் இயக்குனர் என்னை உங்கள் நெஞ்சை நோக்கி தான் வாளை குத்த சொன்னார் ஆனால் நான்தான் மாற்றி செய்து விட்டேன் என்று கூறினார். உடனே அதைக் கேட்ட எம்ஜிஆர் அடப்பாவி அப்படியா சொன்னார் என்று கூறி சிரித்துவிட்டார். அந்த அளவுக்கு இருவரும் நண்பர்களாக இருந்திருக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் உச்சகட்ட தயார் நிலையில்…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு…
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) புதிய தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு மாத இறுதியில்…