BREAKING: உயிருக்கு போராடும் தமிழக அரசியல் பிரபலம் நல்லகண்ணு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on மாசி 24, 2026

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கவலை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலை, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தபோதிலும் தொடர்ந்து பின்னடைவிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மூச்சுத் திணறல் மற்றும் வயது மூப்பு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீரடைய வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.