தமிழக மக்களே உடனே கிளம்புங்க.. காலை 9 மணி முதல் 4 மணி வரை… ஒரு ரூபாய் செலவில்லாமல் முழு உடல் பரிசோதனை..!

Spread the love

தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமானது தான் சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களாகும். அதன்படி மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வாக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என ஏராளமான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழக முதல்வரால் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் நலனை பாதுகாத்திடும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை அடிக்கடி செய்வது அவசியமாகும். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் 15000 வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளிலும் நான்காயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இப்படியான நிலையில் மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் மக்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முழு உடலையும் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிவதற்கான பணிகளும் இந்த முகாம்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் ஒவ்வொரு வட்டத்திற்கும் மூன்று என்ற வகையில் 1164 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஓராண்டு காலத்திற்கு பொதுமக்கள் இந்த திட்டம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த முகாம்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் மக்களிடமே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் பயன்படும். இந்த முகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

22 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

36 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

40 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

44 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

48 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

51 minutes ago