தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள தமிழா தமிழா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் காதல் திருமணம் செய்து கொண்ட மகன்கள் மற்றும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.
இதில் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய மகன் வைத்த பாசத்தையும் தற்போது மகனின் மாற்றத்தையும் அரங்கத்தில் கூறி தாய்மார்கள் கொந்தளிக்கின்றன. ஒரு கட்டத்தில் மகன் பெற்ற அம்மாவை, தற்போது அம்மா எனக்கே மாமியாராக மாறிவிட்டார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்துள்ளார். மற்றொருவர் தன்னுடைய மகன் தான் கேட்டா ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கவில்லை என்று கண்கலங்குகிறார். மேலும் மகனுக்கு புளி சாதமும் எடுத்து வந்து அவருக்கு ஊட்டி விட்டு தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்த உணர்ச்சி பூர்வமாக மாறியது தமிழா தமிழா அரங்கம். தற்போது தொடர்பான ப்ரோமோ வைரலாகி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…