தமிழகத்தில் நாளை கோகுலாஷ்டமி என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறாது என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் 44,418 பேரும், இரண்டாவது வாரத்தில் 48,418 பேரும் பயன் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . அடுத்த வாரம் சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி 38 மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
