தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் போஸ் வெங்கட். சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ‘மெட்டி ஒலி’. இந்த தொடரில் நடித்தது மூலமாக இவர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதைதொடர்ந்து பாரதிராஜாவின் இயக்கத்தில் ஈரநிலம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் சிவாஜி ,மருதமலை, தாம் தூம், சரோஜா, சிங்கம், கோ, யாமிருக்க பயமே, 36 வது வயதினிலே, கவண், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ளார் .2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். இவர் நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார் .இவருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் , பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.

நடிகர் போஸ் வெங்கட் அவர்களுக்கு வளர்மதி குணசேகரன் என்ற சகோதரி ஒருவர் உள்ளார். நேற்றுதனது சகோதரி வளர்மதி குணசேகரன் இயற்கை எய்தி விட்டதாக நடிகர் போஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்துடன் பதிவு செய்திருந்தார். இதை தொடர்ந்து அவரது அண்ணனும் அதே தினத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் நடிகர் போஸ் வெங்கட்டின் மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது.

தற்பொழுது நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி மற்றும் சகோதரர் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க நக்கீரன் கோபால் அவர்கள் நடிகர் போஸ் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் பதிவு செய்த்துள்ளார் நடிகர் போஸ் வெங்கட். இதோ அந்த பதிவு…
View this post on Instagram
