மூடப்பட்டதாக சொன்ன 717 டாஸ்மாக் கடைகள் ரகசியமாக இயங்குகிறதா?… அரசை அதிரவைத்த நயினார் நாகேந்திரனின் ‘வெள்ளை அறிக்கை’ சவால்…!

Spread the love

தமிழகத்தில் மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளின் முழு விவரங்களையும், அவை அமைந்திருந்த இடங்களின் முகவரிகளையும் மாவட்ட வாரியாகத் தொகுத்து தமிழக அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அரசு அறிவித்தபடி இந்தக் கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டதா அல்லது வெறும் கண் துடைப்புக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை முழுமையாக மூடாமல், அதே பகுதிக்குள்ளேயே இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி விளம்பரம் தேடும் நோக்கில், வருவாய் குறைந்த மற்றும் பார் வசதி இல்லாத கடைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து மூடிவிட்டு, 717 கடைகளையும் மூடிவிட்டதாக அரசு நாடகமாடுவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில் சாடியுள்ளார்.

அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டதாகச் சொல்லப்பட்ட சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருவதாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “மாற்று சக்தி” என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்துபவர்கள், கள நிலவரத்தில் உண்மைக்கு மாறாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, மூடப்பட்ட கடைகளின் அசல் பட்டியலை முகவரியுடன் அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Swetha

Recent Posts

குடும்பத்தலைவிகளுக்கு ஷாக்…. மகளிர் உரிமைத்தொகையில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கம்… அதிகாரிகளுக்கு பறந்த ரகசிய உத்தரவு…!

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…

2 minutes ago

“35 நொடிகளில் 10 உதை…. நோயாளிக்கு நேர்ந்த கொடூரம்”…. ஹாஸ்பிடல் ஊழியர் செய்த அந்த ஒரு செயல்… வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ….!

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…

9 minutes ago

“பசி தாங்க முடியல, விட்றலாம்னு தோணுச்சு”…. ஆளே மாறிப்போன இன்ஸ்டா பிரபலம் தீபா சதீஷ்…. அவரே ஓப்பனா சொன்ன அந்த ஷாக்கிங் உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…

18 minutes ago

“எவன் கூட டீ கள்ளத்தொடர்பு?”…. விஷம் குடிக்க மறுத்த மனைவி… கதறிய 3 வயது குழந்தை…. பழனியில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!

குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…

28 minutes ago

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

35 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

41 minutes ago