“தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம் பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் பீகார் மாநில தேர்தல் பற்றிய பலரும் ஏளனமாக பேசினார்கள். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடையும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கு இப்போது என்ன நடந்தது? 202 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை எதிர்த்து TVK ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் அப்படி என்றால் இறந்தவர்களின் ஓட்டுகளை வாங்க விஜய் விரும்புகிறாரா? என்ன பேசுகிறார் அவர்? கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறாரா? எந்த காரணத்திற்காக அவர் ஆதரவாக இருக்கிறார் ? கரூரில் உங்கள்(விஜய்) மீது செருப்பை கழட்டி வீசிய கட்சிக்கு ஆதரவாக இருக்கிறீர்களா? உங்கள் கூட்டத்தில் 41 பேர் இறந்தார்கள் அவர்களின் பிணங்களின் மீது நடந்து வந்த ஸ்டாலினுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என்று பேசியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…