தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சிச் சாதனைகளை விளக்கும் புத்தகம் ஒன்றை ரஜினிகாந்திடம் நயினார் நாகேந்திரன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகம் மற்றும் தேசிய அரசியலில் தற்போதைய நிலவரங்கள், ஆட்சி மாற்றம் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மறுபுறம், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து, தற்போது “வி தி லீடர்ஸ்” என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். ஆன்லைன் வழியாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் குறுகிய காலத்திலேயே சுமார் 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலரும் தீவிர ஆர்வத்துடன் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பிரபல நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸும் அண்மையில் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். அண்ணாமலை “புரிதல் கொண்டவர்” என்று பாராட்டியுள்ள லாரன்ஸ், ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் தான் இந்த புதிய அரசியல் இயக்கத்தில் இணைவதாகவும் பேசியிருந்தார். இவ்வாறு தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…
மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…