இந்த லட்சணத்தில் இருந்துகிட்டு… இதுல “அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு… ஸ்டாலினை கிழித்தெடுத்த நயினார்..!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

பெண் பிள்ளைகளை தவிக்க விட்டு முதல்வர் ஸ்டாலின் தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடுகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார்  நாகேந்திரன் தெரிவித்தார், இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருமணத்திற்கு மறுத்ததால் தஞ்சாவூரில் பள்ளிக்கு செல்லும் வழியில் பெண் ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார், இந்த செய்தியை கேட்கும் போது மனம் பதறுகிறது.   சில தினங்களுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் இதேபோல காதலிக்க மறுத்த பள்ளி மாணவிகளையும் ஒருவர் கொலை செய்தார். இந்த ரணமே இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

பெண்களின் விருப்பு வெறுப்பை மதிக்கக்கூட திராணியற்றுவிட்டதாக திமுக ஆட்சியில் உள்ள தமிழ் சமூகம் தன்னை மறுக்கும் பெண்ணை கொலை செய்யும் அளவிற்கு குற்றவாளிக்கு தைரியம் வந்துவிட்டது. இதனால் சட்டம் சீரழிந்து விட்டதா ? அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை? கற்பழிப்பு, கடத்தல் ,காதலிக்க மறுத்தால் கொலை என தினமும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றோர் வயிற்று நெருப்பைக் கட்டிக் கொண்டு தவிக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சொந்த மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து மடல் வாசிக்கிறார். இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு அப்பா என்ற பட்டத்திற்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று கூறியுள்ளார்.