தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனுக்கு ஒன்றிய இணையமைச்சர் பதவி வழங்க அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றுள்ளார். தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த முக்கிய நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நயினார் நாகேந்திரனுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவு தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்துவதற்கான கட்சியின் தேசிய தலைமையின் உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
