#image_title
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராகவும் புகழ்பெற்ற நடிகராகவும் இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் நடிகர் ஆனார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்ப்பணிப்போடு உழைத்தார் MGR. தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் MGR.
எம்ஜிஆரின் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் சமூக நீதி கருத்துக்கள் ஆக்ஷன் கட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் வெகுவாக இவரை ரசித்தனர். தன்னை ஆதரித்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் இறங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிறப்பாக ஆட்சி நடத்தினார். தலைவராக மட்டுமல்லாமல் உதவி செய்யும் குணம் கொண்டவராகவும் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்திருக்கிறார் MGR. அதற்க்கு ஒரு சம்பவம் இருக்கிறது.
அது என்னவென்றால் ஒரு முறை கருத்து வேறுபாட்டால் நகைச்சுவை நடிகர் நாகேஷ் MGRஐ தவறாக பேசியிருக்கிறார். அதற்கு பிறகு அவர் எம்ஜிஆரை சந்திக்கவே இல்லை. சிறிது காலத்திற்கு பிறகு MGR முதலமைச்சரானதற்கு பிறகு நாகேஷ் அவரை சந்திக்க சென்றிருக்கிறார். ஆனால் பழசு ஏதும் மனதில் வைக்காத MGR என்ன வேணும் உங்களுக்கு நான் என்ன உதவி செய்யணும் என்று கேட்டிருக்கிறார்.
உடனே நாகேஷ் நான் கட்டிய நாகேஷ் கலையரங்கத்தை திறக்க விடாமல் கார்ப்பரேஷன்காரர்கள் தடுக்கிறார்கள். நீங்கள் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். என்னதான் நாகேஷ் தன்னை பற்றி தவறாக பேசினாலும் அந்த பிரச்சனையை முடிக்க செய்து நாகேஷ் கலை அரங்கத்தை திறக்க வைத்திருக்கிறார் MGR .அத்தனை அன்புள்ளம் கொண்டவராகவும் உதவி செய்யும் நற்குணத்தையும் கொண்டிருந்திருக்கிறார் MGR.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…