Connect with us

CINEMA

“நான் பழைய ஆளு, நீ இன்னைக்கு என்ன விட பெரிய நடிகர்… – வாழ்க்கையில இத மட்டும் கத்துக்கோ” – நாகேஷ் சொன்ன வாழ்க்கைத் தத்துவம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

   

ஆனால் 2000களுக்குப் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த குறிப்பிடத்தக்க படம் என்றால் அது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள்தான். இந்நிலையில் நாகேஷோடு நெருக்கமாகப் பழகிய நடிகர் இளவரசு அவர் தனக்கு சொன்ன ஒரு முக்கியமான வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றி சாய் வித் சித்ரா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் ஆடியோ வெளியீட்டில் நாகேஷ் சாரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் படித்த “எதிர்காலத்துக்கான சிறந்த சேமிப்பு.. கடந்த காலத்தின் நினைவுகள்தான்’ என்ற மேற்கோளை அவரிடம் சொல்லி இது சரியா சார்’ என்றேன்.

அவர் என்னிடம் “டேய் நான் இன்னைக்கு பழைய நாகேஷ், எனக்கு வேலை இல்லை. நீ என்னை விட இன்று பெரிய நடிகர். நான் திருவிளையாடல் தருமியையோ அல்லது தில்லானா மோகனாம்பாள் வைத்தியையோ இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருந்தால் நான் உன்னை மதித்துப் பேசக் கூட மாட்டேன். அதனால் எல்லாத்தையும் மறக்கக் கத்துக்கோ” என தடாலடியாக பேசினார். எனக்கு அது மிகப்பெரிய கண்திறப்பாக இருந்தது.” என அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top