பிரபல காமெடி நடிகரான நாகேஷ் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சித்ரா வெங்கட்ராமன் நாகேஷ் பற்றி கூறியதாவது, சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் நாகேஷ் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார்.

அப்படி இருக்க ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்க்கு நாகேஷ் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் ஒதுக்க முடியும். பெரிய பெரிய நடிகர்கள் கூட நாகேஷின் வருகைக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருப்பார்கள். அப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர் நடிகர் நாகேஷிடம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக செல்லும் போது நடிகர்களை எப்படி சமாளிப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு நாகேஷ் சிவாஜி எம்ஜிஆர் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளேன். அதில் சிவாஜியை சமாளிப்பது தான் கொஞ்சம் கடினம். ஏனென்றால் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் அவர் 6.50 மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்து விடுவார். நான் தாமதமாக வந்தாலும் கோபத்தை காட்ட மாட்டார். பொறுமையாக தான் இருப்பார். பின்னர் நாங்கள் டிபன் சாப்பிடும்போது தாமதமாக வருவதை சுட்டிக்காட்டி கிண்டல் அடிப்பார்.

எம்ஜிஆரை பொறுத்தவரை அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். இதனால் என் சூழ்நிலையை புரிந்து கொண்டு இயக்குனரிடம் முதலில் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுங்கள். நாகேஷ் பொறுமையாக வரட்டும் எனக் கூறி விடுவார். அதன்படி நான் வந்த பிறகு பிற காட்சிகள் எடுக்கப்படும் என நாகேஷ் கூறியுள்ளார். இந்த தகவலை சித்ரா வெங்கட்ராமன் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

