Categories: சினிமா

தனுஷுக்கு OK ரஜினிக்கு NO-வா? என்னப்பா இது நியாயம்..? கூலி படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆகிய வசூல் சாதனை படைத்தது. அடுத்தடுத்த படங்கள் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதில் ரஜினிகாந்த் மிகவும் கவனமாக இருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அந்த படத்தை ஞானவேல் இயக்குகிறார். அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், துஷாறா விஜயன் உள்ளிட்டோர் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக அமையும். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ அதேபோல கூலி திரைப்படமும் ரஜினிக்கு மறக்க முடியாத படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஏற்கனவே ஷாருக்கான் ரன்வீர் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் பிரபல ஹீரோவான நாகர்ஜுனாவை கூலி படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பட குழுவினர் பேசியுள்ளனர்.

ஆனால் நாகர்ஜூனாவும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். ரஜினிக்கு வில்லனாக கூலி படத்தில் நடித்தால் தனது ஸ்டார் ஹீரோ இமேஜ் போய்விடுமோ என நாகர்ஜூனா யோசிப்பதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா திரைப்படத்திலும், நா சாமி ரங்கா படத்திலும் நாகர்ஜூனா பிசியாக நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் கூலி வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்களாம்.

admin

Recent Posts

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

10 minutes ago

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

16 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

21 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

26 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

55 minutes ago