நாகர்ஜூனாவுக்கு இந்த நோயா..? 15 வருடங்களாக வாட்டிய தீராத நோய்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

சினிமாவில் மிகவும் ஃபிட்டான தோற்றத்துடனும், இளமை மாறாத ‘கிளாமர்’ உடற்கட்டுடனும் காணப்படும் நடிகர் நாகார்ஜுனா. நடிகர் நாகார்ஜுனாவை தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை. 20 இல் எப்படி இருந்தாரோ அதே லுக்கில் தான் இப்போதும் இருக்கிறார். இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து அசத்துகிறார்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தீராத உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக நாகார்ஜுனாவை முட்டி வலி (Knee Pain) பிரச்சினை வாட்டி வருகிறது. திரையில் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் தெரிந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த மூட்டு வலியைக் கட்டுப்படுத்த அவர் தொடர் சிகிச்சைகளையும் கவனத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

   

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், 15  வருடங்களுக்கு முன் மூட்டு வலி தொடங்கியது. அறுவை சிகிச்சை தேவை என்றாலும், நான் அதைத் தவிர்த்தேன். லூப்ரிகன்ட் மற்றும் PRP சிகிச்சை எடுத்தேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். இப்போது நான் நலமாக உள்ளேன்” என கூறியு்ளார்.