தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையையும் பார்த்துக் கொண்டு சினிமாவையும் பார்த்துக் கொண்டு பிஸியாக இருந்தனர். இப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் நான்கு ஆண்டுகளில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

அதன் பிறகு இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்த நிலையில் விவாகரத்து பெற்று 3 ஆண்டுகள் கழித்து நாக சைதன்யா இரண்டாவதாக பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படியான நிலையில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சமந்தாவுடன் விவாகரத்து பற்றி முதல் முறையாக நாக சைதன்யா பேசியுள்ளார்.

அதில், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த முடிவை நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்தோம். அதோடு ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம். நான் ஒரு உடைந்த குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால் ஒரு உறவில் இருந்து பிரிவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்கும் மேலாக என்ன விளக்கம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. எல்லோரும் என்ன ஏதோ கிரிமினல் மாதிரி நடத்தாதீங்க. இந்த முடிவுக்கு ரசிகர்களும் ஊடகங்களும் மதிப்பளிக்க வேண்டும். எங்களுடைய முடிவில் தனி உரிமை கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என நாக சைதன்யா கூறியுள்ளார்.
