நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராகி விட்டார். சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இவர் தற்போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் நாக சைதன்யாவுக்கும் சோவிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களது திருமணம் நடைபெறும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும், திருமண தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…