என் முன்னாள் மனைவி சமந்தா என் பெயரை பயன்படுத்தி… அதை உடனே நீக்க வேண்டும்… நாக சைதன்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மறுபுறம், சமந்தா தனது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் ராஜ் நிடிமோரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாயின. இந்த சூழலில், சமந்தாவுடனான முதல் திருமண முறிவுக்கு நாக சைதன்யா தான் காரணம் என்றும், அவர்தான் ஏமாற்றினார் என்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.

தற்போது, தங்களைப் பற்றி அவதூறாகவும் பொய்யாகவும் பதிவிட்டு வந்தவர்கள் மீது நாக சைதன்யா அதிரடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள வழக்கில், தனது முன்னாள் மனைவி தன் பெயரைப் பயன்படுத்தி தொடர்ந்து யூடியூப்பில் பரப்பி வரும் பொய்யான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஆபாச இணையதளங்களில் வெளியாகும் வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

   

இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்துள்ள நாக சைதன்யா, இது யாருக்கும் எதிரானது அல்ல என்றும், தனது தனிப்பட்ட அடையாளத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் ‘பர்சனாலிட்டி ரைட்ஸ்’ (Personality Rights) சட்டத்தின் கீழ் மட்டுமே இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இணையதளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் இந்த சட்டப்பூர்வமான படியை எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.