நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவரை நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மகுரலோன் என்றும் அழைப்பர். நல்ல குரல் வளம், தெளிவான உணர்ச்சிப்பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்பு திறன் ஆகியவை இவரின் தனிச்சிறப்புகள் ஆகும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று சிறப்பாக நடிப்பவர் சிவாஜி கணேசன்.
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தான். இது தவிர பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதாசாஹெப் விருது போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். 1952 இல் பி ஏ பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவாஜி கணேசன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 300 படங்களில் மேல் நடித்துள்ளார் சிவாஜி கணேசன்.
தமிழ் திரைப்படத் துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தான். சமுதாயம், புராணம், பக்தி படங்கள், சரித்திரம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் திறம்பட நடிப்பவர் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசன் 1952 ஆம் ஆண்டு கமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவமும் இருக்கிறது. அது என்னவென்றால் 1952 ஆம் ஆண்டு தான் சிவாஜியும் பத்மினியும் முதன்முதலாக இணைந்து பணம் என்ற திரைப்படத்தில் நடித்தனர்.
இந்தத் திரைப்படத்தின் படக்காட்சி காலைப் பொழுதில் ஷூட்டிங் முடித்துவிட்டு அதற்குப் பிறகுதான் தன்னுடைய திருமணத்திற்கே சென்றுள்ளார் சிவாஜி கணேசன். அப்படி சிவாஜி கணேசன் திருமணத்தன்று காலை சூட்டிங் இல் பத்மினி கழுத்தில் தாலி கட்டுவது போல் உள்ள காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்படியே அன்றைய தினம் தாலி கட்டி ஷூட்டிங்கில் நடித்து முடித்துவிட்டு, உடனே அங்கிருந்து கிளம்பி சுவாமிமலை சென்று கமலாவை திருமணம் செய்து உள்ளார் சிவாஜி கணேசன். இப்படி ஒரே நாளில் ரீலுக்காகவும் ஒருத்தருக்கு தாலி கட்டிவிட்டு ரியலாகவும் ஒருத்தருக்கு தாலி கட்டி உள்ளார் சிவாஜி கணேசன். இதிலிருந்து அவர் சினிமாவின் மீதும் நடிப்பின் மீதும் கலையின் மீதும் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது.