நாதஸ்வரம் சீரியல் மூலமாக புகழ்பெற்ற நடிகை ஸ்ருத்திகா மறுமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நாதஸ்வரம் என்ற சீரியல் மூலமாக மிகவும் புகழ் பெற்ற நடிகையாக மாறியவர் ஸ்ருத்திகா. திருமுருகன் இயக்கிய அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதிலும் நடிகை ஸ்ருதிகாவின் நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. சின்னத்திரை மட்டுமல்லாமல் தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியின் நடித்த இவர் வெள்ளித்திரையில் பெரிய அளவு கை கொடுக்காத காரணத்தினால் மீண்டும் சின்னத்திரையிலேயே சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். திருமுருகன் இயக்கத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சீரியல்களில் நடித்திருந்தார். குலதெய்வம், கல்யாணப்பரிசு போன்ற சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இவருடைய எளிமையான தோற்றம் மற்றும் நடிப்பு மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. மேலும் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் உருவானது.திருமுருகன் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று சீரியல்களில் நடித்து வந்த காரணத்தினால் திருமுருகனுக்கும் ஸ்ருத்திகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக பலரும் பல வதந்திகளை கிளப்பி வந்தனர். ஆனால் இதையெல்லாம் பொய் என்று ஸ்ருதிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகை ஸ்ருத்திகா நான்கு வருடத்திற்கு முன்பு சனீஸ் என்பவரை கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை பகிர்ந்த ஸ்ருத்திகா நான் இப்போது ஸ்ருத்திகா சனீஸ் என்று பதிவிட்டு இருந்தார்.

தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருக்கின்றார் ஸ்ருத்திகா. அதோடு மகராசி என்ற சீரியலில் நடித்து வரும் ஆரியன் என்பவரை விரைவில் திருமணம் செய்ய போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ஆரியனும் ஸ்ருதிகாவும் மகரராசி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள். இருவரும் விவாகரத்து ஆனவர்கள் என்பதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் கூறி வருகிறார்கள். இந்த செய்தியை கேட்ட பலரும் ஸ்ருதிஹாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
