Connect with us

பிரபல இசையமைப்பாளர்களை ரிஜெக்ட் செய்த தயாரிப்பாளர்.. தனது ஸ்டைலில் புரிய வைத்த எம்.ஜி.ஆர்..!!

CINEMA

பிரபல இசையமைப்பாளர்களை ரிஜெக்ட் செய்த தயாரிப்பாளர்.. தனது ஸ்டைலில் புரிய வைத்த எம்.ஜி.ஆர்..!!

 

இரட்டையர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி மேற்பார்வையில் திரையுலகில் தங்களது இசை பயணத்தை ஆரம்பித்தவர்கள் சங்கர், கணேஷ். 1960 மற்றும் 1970-களில் இரட்டையர்களான சங்கர் கணேஷ் தங்களது இசையால் ரசிகர்களை கவர்ந்தனர். 1967-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மகராசி படம் மூலம் தங்களது இசை வாழ்க்கையை தொடங்கினர்.

கவிஞர் வழங்கிய தேவரின் இசையமைப்பாளர்கள் - சங்கர் கணேஷ் | Sankar Ganesh,  Legendary Musician - Tamil Filmibeat

   

சங்கர் கணேஷுக்கு எம்ஜிஆர் படத்திற்கு எப்படியாவது இசையமைக்க வேண்டும் என்பது ஆசை. அவர்கள் தொடர்ந்து எம்ஜிஆரை சந்தித்து தங்களுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த சமயம் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்தில் நடிக்க எம்ஜிஆர் ஒப்புக்கொண்டிருந்தார். கடந்த 1972-ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் தயாரிப்பாளரான ஜி.என் வேலுமணி இடம் எம்ஜிஆர் சங்கர் மற்றும் கணேஷ் பற்றி கூறியுள்ளார்.

எம்ஜிஆர் 100 | 98 - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! | எம்ஜிஆர் 100 | 98  - அரசியல் எதிரிகளையும் ஈர்த்த பண்பு! - hindutamil.in

 

ஆனால் ஜி.என் வேலுமணி ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் எம்.ஜி.ஆர் ஜி.என் வேலுமணியை தொடர்பு கொண்டு தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அவர் வந்தவுடன் சில பாடல்களை கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த பாடல்களைக் கேட்டவுடன் ஜி.என் வேலுமணி அசந்து போய்விட்டார். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் பற்றி கேட்க வேண்டுமா? எல்லா பாடல்களுக்கும் நன்றாக டியூன் போட்டு இருக்கிறார் என கூறியுள்ளார். அதனை கேட்டவுடன் எம்ஜிஆர் சிரித்தபடியே பாடல் நன்றாக இருக்கிறது என்பது உண்மைதான்.

நான் ஏன் பிறந்தேன் மெகாஹிட் திரைப்படம் | Naan Yen Pirandhen Movie | MGR, KR  Vijaya, Nagesh | HD - YouTube

ஆனால் இந்த பாடல்களுக்கு டியூன் போட்டது எம்.எஸ் விஸ்வநாதன் இல்லை. டியூன் போட்டது ஷங்கர் கணேஷ் தான் என கூறியுள்ளார். இப்ப சொல்லுங்க சங்கர் கணேஷ் இருவரையும் நான் ஏன் பிறந்தேன் என்ற படத்திற்கு இசை அமைக்க சொல்லலாமா என கேட்டுள்ளார். ஜி.என் வேலுமணி ஆல் ஒன்றும் கூற முடியவில்லை. அதன் பிறகு தான் நான் ஏன் பிறந்தேன் படத்தில் பணியாற்ற சங்கர் கணேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இதய வீணை என்ற படத்திற்கும் அவர்கள் இசையமைத்துள்ளனர்.

எம்.ஜி.ஆர் ,சிவாஜியின் வெற்றிப்படங்களை எடுத்தவர் குடும்பம் வறுமையில்!! –  Cinema Murasam

author avatar
Priya Ram
Continue Reading
To Top