காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய திருவுருவ சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதனிடையே சென்னையில் உள்ள கிண்டி காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்த வந்த போது கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சீமான் கதவை பூட்டியது தொடர்பாக கேக்கையில், மேலிட உத்தரவு என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசிய சீமான் , எவன் அந்த மேலிடம்? மண்ணின் மைந்தர்களுக்கு அஞ்சரை செலுத்த ஜாதி பார்த்து அமைச்சர்களை அனுப்புவது தான் திராவிடமா? கதவை பூட்டுன அயோக்கிய பையன் எவன், கேட்டா மேலிட உத்தரவு என்று சொல்கிறார்கள் என்று சீமான் கொந்தளித்தார். கவர்னர் ரவி மரியாதை செலுத்தி விட்டு சென்ற பிறகு பிரதான நுழைவாயில் மூடப்பட்டதாக கூறப்படுகின்றது.
