நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது… தமிழ்நாட்டிலேயே பெரிய கூட்டணி என்னோடது தான்… சீமான் அதிரடிபேச்சு ..!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பெண்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. அந்த பணத்தில் வேலை வாய்ப்பைப் பெருக்கினால் இளைஞர்களே அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். நான் இருக்கும் வரை பாஜக வளராது. வெல்லவும் வெல்லாது. அந்த கட்சியோடு அதிமுக நேரடியாக கூட்டு வைத்திருக்கிறது. திமுக மறைமுகமாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.

தேர்தலுக்காக கொள்கைகளை விடுத்து கூட்டணி அமைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல்  போய் உள்ளது. அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி இடம்பெறாது. திமுகவிற்கு எதிராக இணையும் ஓரணி  நாங்கள் அல்ல. திமுகவை எதிர்க்கும் ஒரேஅணி நாங்கள். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் பெரிய கூட்டணி என்னுடையது தான்” என்று கூறியுள்ளார்.