Connect with us

“மிஸ்டர் ராமச்சந்திரன் உக்காருங்க… உங்க முறை வரும்போது பேசிக்கலாம்”… கூட்டத்தில் எம் ஜி ஆரை அடக்கிய எழுத்தாளர்!

CINEMA

“மிஸ்டர் ராமச்சந்திரன் உக்காருங்க… உங்க முறை வரும்போது பேசிக்கலாம்”… கூட்டத்தில் எம் ஜி ஆரை அடக்கிய எழுத்தாளர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

வழக்கமாக எம் ஜி ஆர் தன்னுடைய படங்களின் பாடல்களை தான்தான் உறுதி செய்வார். பாடலை யார் எழுத வேண்டும், யார் பாட வேண்டும் என்பதையெல்லாம் அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார். அதற்கு உடன்படும் நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்குதான் படம் கொடுப்பார்.

அதே போலதான் அவர் முதல்வர் ஆனபோதும் பெரும்பாலான முடிவுகளை அவர்தான் எடுப்பார். அவரை எதிர்த்து பேசுபவர்களை அவருக்கு பிடிக்காது என்றும் சொல்லப்படுவது உண்டு. ஆனால் அவரை எதிர்த்து பேசிய பலரையும் அவர் ஆதரித்துள்ளார். இதற்கு இயக்குனர் மகேந்திரன் முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன் வரை பல உதாரணங்கள் உள்ளன.

   

அதே போல ஒரு சம்பவம்தான் எழுத்தாளர் நா பார்த்தசாரதிக்கும் நடந்துள்ளது. புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்த அவரை ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் பேச அழைத்துள்ளார் அப்போதைய முதல்வராக இருந்த எம் ஜி ஆர். அந்த கூட்டம் தொடங்கியதும் பேச தொடங்கிய நா.பார்த்த சாரதி, ‘தமிழகத்தில் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதை 600-ல் இருந்து 200 ஆக குறைத்துவிட்டார்கள்” என்று பேச ஆரம்பித்தார்.

 

இதற்கு பதில் சொல்ல நினைத்து எம்.ஜி.ஆர் எழுந்து பேச முயன்றுள்ளார். அப்போது நா பார்த்தசாரதி “மிஸ்டர் ராமச்சந்திரன் நீங்கள் பேச வேண்டும் என்றால், உங்களுக்கான நேரம் வரும்போது பேசுங்கள் என்று முகத்திற்கு நேராகவே கூறியுள்ளார். அதுவரை குறுக்கிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார். எம் ஜி ஆரும் அப்போது அமர்ந்துவிட்டு தன் முறை வந்த போது அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தாராம்.

 

Continue Reading
To Top