#image_title
தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.
முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே.
தான் நடித்து சம்பாதித்த செல்வம் முழுவதையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவிட்டுள்ளார். தனது வாரிசுகளுக்குக் கூட எந்த சொத்தையும் அவர் சேர்த்துவைக்கவில்லை. ஒரு நாள் கலைவாணர் தனது நண்பர் புலவர் சண்முகசுந்தரத்தோடு பேசிக் கொண்டிருக்கையில், “நிறைய சம்பாதிக்கிறீர்கள் ஆனால் உடனே செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?” என சண்முகசுந்தரப்புலகர் கேட்டார்.
அதற்கு ஒரு குட்டிக்கதை சொல்லி பதிலளித்துள்ளார் என் எஸ் கே “ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.
உள்ளே சென்ற கணவர் மனைவியிடம் கோபித்துக் கொண்டு எப்போது பார்த்தாலும் நண்பர்களுக்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? பெரிய விருந்தே அல்லவா ஏற்பாடு செய்திருக்கிறாய் என்று கோபமாகக் கடிந்து கொண்டுள்ளார்.
அதற்கு சட்டென அவர் மனைவி, ”நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன? உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். அப்போதுதான் அந்த இளைஞருக்கு உண்மை உறைத்தது” என்ற கதையைக் கூறி அந்த இளைஞனைப் போல என் மக்களும் ஏன் பழையதை சாப்பிடவேண்டும். அவர்களே உழைத்து புதிதாக சாப்பிடட்டும் எனக் கூறினாராம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ…
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநரும், நடிகருமான ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும்,…
தமிழ் திரையுலகில் திரைக்கதை அமைப்பதில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்டவர் இயக்குநர் கே.…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு…
சென்னை தாம்பரம் அருகே உள்ள கழுகுமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலில், குரங்குகள் சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலும்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…