நடிகர் விஷால் வீட்டின் மீது கல் எறிந்த மர்ம நபர்கள்…. இதற்காகத்தான் கல் எறிந்தோம்….. போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்…

By Begam on புரட்டாதி 30, 2022

Spread the love

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மர்ம நபர்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான ஆக்சன் ஹீரோ நடிகர் விஷால். தனது படத்தின் சண்டைக் காட்சிகளில் அதிக ரிஸ்க்  எடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர்.நடிகர் விஷால் தற்பொழுது சுனைனா ஹீரோயினாக நடிக்கும் ‘லத்தி’ படத்திலும்,  ‘மார்க்’  திரைப்படத்திலும், தானே  இயக்குனராக அறிமுகமாகும் ‘துப்பறிவாளன் 2 ‘படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

   

அண்மையில் விஷாலின் வீட்டின் மீது கடந்த சில நாள் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டது சம்பவ இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீஸ் அங்கிருந்த சிசிடிவி கேமராவை  ஆராய்ந்தனர். அதில் சிவப்பு நிற மாருதி ஸ்விப்ட் காரில் வந்த நான்கு நபர்கள் கல்வீசி தாக்கியிருந்தது தெரியவந்தது.

 

 

அவர்களை தேடிப் பிடித்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள்  நால்வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மணிரத்தினம், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரவீன் குமார், அண்ணாநகரை சேர்ந்த மீன் வியாபாரியான ராஜேஷ் மற்றும் அதே பகுதியில் ஹோட்டலில் நடத்தி வரும் சபரீஷ்வரன் என தெரியவந்தது.

 

மேலும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் எதற்காக விஷாலின் வீட்டின் மீது கல் எறிந்தார்கள் என்று கூறிய காரணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. சம்பவம் நடந்த அன்று  இவர்கள் குடித்துவிட்டு வந்ததாகவும், நால்வருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டதாகவும், அதில் ஒருவர் வீசிய கல் விஷால் வீட்டில் மீது  பட்டு கண்ணாடி உடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர்.