புத்தரின் பல்லை மையமாக வைத்து கமல்ஹாசனுக்காக மிஷ்கின் எழுதிய கதை… நடக்காமல் போனதின் பின்னணி என்ன?

By vinoth on தை 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின்  சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்த லாலா, பிசாசு, சைகோ, துப்பறிவாளன் டேட் ஆப் பர்த் திரைப்படங்களை இயக்கினார். இவர் தன்னுடைய படங்களில் வித்தியாசமான திரைமொழியைக் கையாண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்துள்ளார். இவர் படங்களில் வசனங்களை விட காட்சிப்பூர்வமான அர்த்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

   

அதனால் அவர் படக்காட்சிகளைப் பார்த்தாலே அது அவருடைய படம்தான் என்பதை ஒரு திரைப்பட பார்வையாளானால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மிஷ்கின் தொடர்ச்சியாக நல்ல படங்களைக் கொடுத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் சொதப்பியதும் உண்டு. தற்போது அவர் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் ரிலீஸாகாமலும், ட்ரெய்ன் படம் இறுதி கட்டத்திலும் உள்ளன.

   

இந்நிலையில் சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசியது பெரியளவில் சர்ச்சைகளை உண்டாக்கியது. அந்த பேச்சில் அவர் சில கெட்டவார்த்தைகளையும், இளையராஜாவை ஒருமையிலும் பேசியது கண்டனங்களைப் பெற்றதை அடுத்து தனது பேச்சுக்காக மன்னிப்புக் கேட்டார்.  அந்த மன்னிப்பின் இடையே அவர் தன்னுடைய பேச்சுக்கு  சில விளக்கங்களையும் கொடுத்தார்.

 

இந்நிலையில் மிஷ்கின் பற்றி சுவாரஸ்யமான ஒரு தகவலைப் பார்ப்போம். கடந்த 2010 ஆம் ஆண்டு மிஷ்கின் கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு படம் உருவாவதாக இருந்தது. அந்த படத்துக்காக திரைக்கதை அமைக்கும் பணிகள் எல்லாம் நடந்தன. ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. அந்த படம் பற்றி பல ஆண்டுகள் கழித்துப் பேசிய மிஷ்கின் அந்த படத்தின் கதை எதைப் பற்றியது எனக் கூறினார்.

அதில் “அந்த கதை புத்தரின் பல் ஒன்றை போற்றிப் பாதுகாக்கும் ஒரு புத்தத் துறவியின் கதையாக உருவானது. அந்த பல்லோடு யாத்ரீகம் செல்லும் ஒரு துறவிப் பற்றிய கதை. அப்போதே அந்த படத்துக்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. அப்புறம் எனக்கும் கமல் சாருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள். கமல் சார் இருக்கும் இடத்தில் அவர் மட்டுமே பேசவேண்டும். அந்த படம் நடக்காததில் எனக்கு வருத்தம் இல்லை. இனிமேல் அந்த படம் நடக்கவும் வாய்ப்பில்லை” எனக் கூறியுள்ளார்.