இயக்குனர் வேலை Bore அடித்ததால் மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு.. வெளியான செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!

By Nanthini on ஐப்பசி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என்று பன்முக திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவர்தான் மிஸ்கின். இவர் முதன் முதலில் டெவில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக தமிழ் தரையில் நுழைந்த மிஷ்கின் இயக்கத்தில் அவரது முதல் படமான சித்திரம் பேசுதடி திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிஷ்கின் என்ற ஒரு படைப்பாளியை தமிழ் சினிமாவிற்கு காட்டியது. இந்த திரைப்படத்தில் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் என்ற ஒரு கானா பாடலில் மஞ்சள் புடவையில் மாளவிகா ஆட ஒரு சிறு கதாபாத்திரம் மட்டும் அப்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட வைத்தது. அதனைத் தொடர்ந்து அஞ்சாதே திரைப்படத்தில் மீண்டும் தன் முதல் பட நாயகன் நரேனுடன் கூட்டணி வைத்தார் மிஸ்கின்.

   

அதனைத் தொடர்ந்து நந்தலாலா, முகமூடி என அடுத்தடுத்து தமிழ் சினிமாவிற்கு அற்புதமான திரைப்படங்களை கொடுத்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் பிசாசு திரைப்படத்தில் வித்தியாசமான கதைகளை கொண்டு வந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

   

 

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் மிஷ்கின் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்திற்கு old is gold என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனியை வைத்து வெளியான ரைட்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோகுல் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இந்தத் திரைப்படம் மூலம் மிஷ்கின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.