Connect with us

CINEMA

விஜய் என் சட்டையை புடிச்சி கேட்டாரு.. உங்க அப்பா என்ன, அதை செய்யவிட மாட்டாருனு சொல்லிட்டன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்திறந்த மிஷ்கின்..

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில், இயக்குநர் மிஷ்கின் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற மிஷ்கின், விஜயை லெஜண்ட் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் மிஷ்கினை கலாயத்தனர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது, விஜயை லெஜண்ட் என்று நான் பாராட்டியதை பலரும் விமர்சிக்கின்றனர்.

அவர்களை பரிதாபமாக நினைக்கிறேன். விஜயின் வளர்ச்சி எனக்கு தெரியும். அவர் கடுமையான உழைப்பாளி. ரொம்பவும் ஒழுக்கமான ஒரு நடிகர். அவரது உயரமும் மரியாதையும் தெரிந்துதான் அவரை பாராட்டினேன். ஒரு நடிகரை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் இத்தனை கோடி பேர் நேசிக்கிறார்கள் என்றால் அது மிகப்பெரிய சாதனை.

   

ஒரு சாதாரண மனிதனை சில நூறு பேருக்கு தெரியும். ஆனால் 10 கோடி பேருக்கு தெரிந்த மனிதராக வாழ்க்கையில் முன்னேறி இருப்பது சாதனைதான். அப்படிப்பட்ட விஜயை என்றுதான் குறிப்பிட வேண்டும். லியோ பட விழா முடிந்த பிறகு என்னுடைய ஆபிஸில் ஒரு சின்ன பார்ட்டி நடந்தது.

அப்போதும் கூட எனது சில நெருங்கிய நண்பர்கள் என் கழுத்தை நெரிக்காத குறையாக, என்னிடம் எப்படி நீ விஜயை லெஜண்ட் என சொல்லலாம் என கேட்டார்கள். உங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக அது உங்களுக்கு தெரியாது. ஒரு சினிமாக்காரனாக இருந்து நான் பார்க்கிறேன். அதனால் அவரது சாதனைகள் புரிகிறது.

சித்திரம் பேசுதடி படத்தை பார்த்த பிறகு, இந்த மாதிரி எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்று விஜய் அப்போதே என்னிடம் கேட்டார். ஆனால் சித்திரம் பேசுதடி படமே உங்களை நினைத்து பண்ணியதுதான் என்றேன். அப்புறம் ஏன் என்னிடம் சொல்லவில்லை, என என் சட்டையை பிடித்து விஜய் கேட்டார்.

நான் சொல்லியிருந்தால், நீங்கள் கதையை மாத்தியிருப்பீங்க, உங்கப்பா கதையை மாத்தியிருப்பார், மிஷ்கின் நானாக இருந்திருக்க மாட்டேன். நான் என்னுடைய வளர்ச்சியையும் பார்க்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். விஜய், அவர் அடைய நினைத்த இடத்தை தொட்டு அடைந்து விட்டார். அதனால் அவரை லெஜண்ட் என்றுதான் இப்போதும் சொல்வேன், என்று கூறியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top