சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள மாதவப் பெருமாள் கோவில் வாசலில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த கும்பல் ஒன்று கத்தியால் ஓட ஓட வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை பட்டினம் பாக்கம் ஸ்ரீனிவாசன் புறம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அஸ்வத் எனப்படும் சூசை மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது. இதனிடையே நேற்று மாலை மயிலாப்பூர் பகுதிக்கு உட்பட்ட மாதவ பெருமாள் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அஸ்வத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி பின்தொடர்ந்த கும்பல் கத்தியை கொண்டு வந்து ஓட ஓட விரட்டி உள்ளனர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து அவரை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்காக இருந்ததை கொலை வழக்காக மாற்றிய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளிகளின் இருசக்கர பதிவு எண்ணை வைத்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…