Connect with us

TRENDING

பிக் பாஸ் சீசன் 7 : என்னோட சப்போர்ட் உங்களுக்கு தான்.. நடிகை ரக்ஷிதா வெளியிட்ட பதிவு.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

 

   

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரக்ஷிதா  தனது கணவர் தினேஷ் தனக்கு  ஆபாசம் மெசேஜ் அனுப்பி தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் இது பொய் புகார் என்பது போலீஸ் விசாரணையில் தெளிவானது.

இப்படி இருவருக்குள்ளும் தற்பொழுது வரை பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்பொழுது கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அங்கு அவர் அவ்வப்பொழுது ரக்ஷிதாவை பற்றியும் பேசி வருகிறார். இதற்கு ரக்ஷிதாவும் அவ்வப்பொழுது பதிலடி கொடுத்து வருவதை நாம் பார்க்கிறோம். எவ்வளவுதான் தினேஷ் இறங்கி வந்து பேசினாலும் தனது விவாகரத்து முடிவில்  ரக்ஷிதா தெளிவாகவே உள்ளார்.

#image_title

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்பொழுது விசித்ராவிற்கும், தினேஷுக்கும் தான் அதிகம் சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது ரக்ஷிதா தனது ஆதரவு எப்பொழுதும் விசித்ராவிற்கு தான் எனக்கூறி இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்  விசித்ராவை ஆதரித்து தினேஷ் மீது தனக்கு எவ்வளவு கோபம் உள்ளது என்பதை நெட்டிசன்களுக்கு உணர்த்தியுள்ளார்.

Continue Reading

More in TRENDING

To Top