சென்னை திருவொற்றியூர் பகுதியில், கந்துவட்டி கொடுமை மற்றும் காவல் ஆய்வாளரின் மிரட்டல் குறித்து வீடியோ ஆதாரத்துடன் பேட்டி அளித்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வட சென்னை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டிப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தனது தாயாரைக் காப்பாற்ற முற்பட்ட நிலையில், உள்ளூர் ரவுடிகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தலுக்கு ஆளான பிரதீப் ராஜ், நேற்று ஊடகங்கள் வாயிலாகத் தனது உயிர பாதுகாப்பு குறித்துக் குரல் கொடுத்திருந்தார். ஆனால், அவர் புகார் தெரிவித்த மறுநாளே படுகொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே சட்டம் ஒழுங்கு குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் ஊடகங்களிடம் பேசிய பிரதீப் ராஜ், தனது தாய் நவநீதம் என்பவரிடம் கடன் வாங்கி சிலருக்குக் கொடுத்ததாகவும், அதைத் திருப்பிக் தராத சூழலில் கடன் கொடுத்தவர்கள் தங்களை மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறியிருந்தார். இருப்பினும், நியாயம் வழங்க வேண்டிய காவல் ஆய்வாளர், ‘உன்னை வெட்டி திருச்செந்தூர் கடலில் கரைத்து விடுவேன், கை காலை உடைத்து விடுவேன்’ என்று தம்மைக் கடுமையாக மிரட்டியதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். செய்தி வெளியான குறுகிய நேரத்திலேயே, அவர் இவ்வாறு கொடூரமாகப் பலியாகியிருப்பது காவல்துறை மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளது.
மகன் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் கண்ணீர் மல்கப் பேட்டியளித்த பிரதீப் ராஜின் தாய், “என் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை, எனக்கு நியாயம் வேண்டும். பெத்த தாயாக இருந்து இன்று பிச்சை கேட்கிறேன், சிஎம் விஜய் சார் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “எனக்கு மலையாக இருந்த ஒரே மகனைத் தூக்கிவிட்டார்கள்; வட்டிப் பணத்தை அடைத்த பிறகும் பத்திரத்தைத் தர மறுத்து, வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி மிரட்டினர். காவல் நிலையம் சென்றபோது துட்டுதான் பேசியதே தவிர எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. இன்ஸ்பெக்டர் என் மகனை காலால் உதைத்து, சுட்டுப் போட்டு விடுவேன் என்று மிரட்டினார்” என்றும் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கொலை சம்பவத்திற்குப் பின்னணியில் நவீன், முத்து, கணேஷ், ராதா, சொப்பனா, சங்கீதா மற்றும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் நவநீதன் ஆகியோரே காரணம் என்றும், கொலையாளிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதீப் ராஜின் தாய் வலியுறுத்தியுள்ளார். போலீஸ் நிலையம் வரை சென்று புகார் அளித்தும் ஒரு இளைஞருக்குப் பாதுகாப்பு கிடைக்காமல், அவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதால், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…