Categories: சினிமா

‘என்னோட அம்மாவுக்கு இந்த நோய் இருக்கு’…! மேடையில் உருக்கமாக பேசி கண்கலங்கிய நடிகை பிரியா பவானி ஷங்கர்..!

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து அவர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கோலிவுட்டில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என எண்ணற்ற படங்கள் உள்ளன.  இந்த நிலையில், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்கவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் செண்டர் சார்பில் கொண்டாடப்பட்ட உலக ரோஜா தின நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கமாக பேசினார். கடந்த ஆண்டு தனது தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டதாகவும், அது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கை ஊட்டினார். மேலும் தனது அம்மா பற்றி மேடையில் பேசும் பொழுது அவர் கண்ணீர் சிந்தியது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

Begam

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

1 மணத்தியாலம் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

2 மணத்தியாலங்கள் ago