தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவருடைய ரைமிங் காமெடிக்கென்று ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது. தனது திரைப்பயணத்தில் சிம்புவுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குறுகிய காலகட்டத்திலேயே விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார்.
தமிழ் சினிமாவில் இவரரின் காமெடிக்கென்று ஓடிய படங்கள் ஏராளம் உள்ளன. இதைத்தொடர்ந்து படிப்படியாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சந்தானம் ஹீரோவாக 2014ல் அவதாரம் எடுத்தார். முதன் முதலில் இவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து டிக்கிலோனா, சபாபதி என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படங்கள் பல சூப்பர் ஹிட் ஆகியது.
நடிகர் சந்தானம் 2004ல் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். நடிகர் சந்தானத்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது. தற்பொழுது நடிகர் சந்தானம் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் சந்தானத்தின் மகன் இவ்ளோ பெருசா வளந்துட்டாரா?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…