தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பணியாற்றுபவர் சைந்தவி. தனது இனிமையான குரல் மூலம் பிரபலமானவர். இவர் முறையாக கர்நாடக இசையை கற்றவர் தனது 12 வயது முதல் பாடல்களை பாடி வருகிறார் சைந்தவி.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகரும் ஆன ஜிவி பிரகாஷ் குமாரை சைந்தவி 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த ஆண்டு மே மாதம் சைந்தவியும் ஜிவி பிரகாசம் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டனர். இது மிகப்பெரிய பேசு பொருளாக சினிமா வட்டாரத்தில் இருந்தது.

#image_title
இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சைந்தவி. தமிழ் சினிமாவில் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படத்தில் அண்டங்காக்கா கொன்டக்காரி பாடல் பாடியதன் மூலம் பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சைந்தவி.
தொடர்ந்து பல பாடல்களை பாடி புகழ்பெற்றார் சைந்தவி. பையா திரைப்படத்தில் அடடா மழடா பாடல் பாடியதற்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான எடிசன் விருதை வென்றார். 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மயக்கம் என்ன திரைப்படத்தில் பிறை தேடும் பாடல் பாடியதன் மூலம் சிறந்த பெண் குரலுக்கான மிர்ச்சி விருது, விஜய் இசை விருது ஆகியவற்றை வென்றார் சைந்தவி.
2012 ஆம் ஆண்டு தாண்டவம் படத்தில் உயிரின் உயிரே பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதினை வென்றார். அடுத்ததாக அசுரன் திரைப்படத்தில் எள்ளு வயப் பூக்கலையே பாடலை பாடினார் சைந்தவி. இந்த பாடல் பட்டுத்தொட்டி எங்கும் பரவி அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஹிட் பாடல் ஆனது.
அந்தப் பாடலை பாடியதற்காக சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆனந்த விகடன் திரைப்பட விருது, மற்றும் சைமா விருதுகளை வென்றார் சைந்தவி. கையிலே ஆகாசம் போன்ற பல எமோஷனலான பாடல்கள் சைந்தவியின் குரலுக்கு கச்சிதமாக பொருந்தும். அப்படிப்பட்ட பாடல்களை பாடி புகழ் பெற்றுள்ளார் சைந்தவி.

#image_title
சைந்தவி-ஜிவி பிரகாஷ் விவகாரத்திற்கு பிறகும் சில நேர்காணலில் கலந்து கொண்டுள்ள சைந்தவி தனது அம்மாவை பற்றி முதன் முதலாக பகிர்ந்து கொண்டுள்ளார். தனது அம்மாவை பற்றி பேசும் போது எமோஷனலாக பேசி உள்ளார் சைந்தவி. அவர் கூறியது என்னவென்றால், என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான நபர், எனக்கு சப்போர்ட் பண்ற ஒரே நபர் என் அம்மா மட்டும்தான். எனக்காக அவங்க எல்லாமே பண்ணுனாங்க. நான் கன்சிவா இருந்து குழந்தை பிறந்த அப்புறம் எனக்காக அவங்க வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து என்னை பார்த்துக்கிட்டாங்க. இப்போ கூட என் மகளை என்னை விட நல்ல பாத்துக்குறது எங்க அம்மா தான். அவங்க இருக்குற தைரியத்தில தான் நான் என் குழந்தையை வீட்டுல விட்டுட்டு நான் வெளியே பாடறதுக்காக போறேன். ஒரு ரெண்டு நாள் கூட என் பொண்ணு எங்க அம்மாவ பிரிஞ்சு இருக்க மாட்டா தேட ஆரம்பிச்சிடுவா. என் அம்மா இல்லன்னா நான் என்ன ஆயிருப்பேன் அப்படினு எனக்கே தெரியல. அவ்ளோ சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு நிறைய பண்ணி இருக்காங்க என் அம்மா என்று கண்களில் கண்ணீருடன் பகிர்ந்தார் சைந்தவி.
