சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் பழனிச்சாமி (45), முதல் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ் (22), சஞ்சய் என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனது 2 ஆவது மகன் சஞ்சயுடன் வசித்து வந்தார்.
கணவரைப் பிரிந்து 17 வயதுடைய மகளுடன் வசித்து வந்த ஜெயலட்சுமி (40) என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டார், பழனிச்சாமி. ஒரே வீட்டில் பழனிச்சாமி, ஜெயலட்சுமி, ஆகாஷ் மற்றும் ஜெயலட்சுமியின் மகள் ஆகியோர் வசித்து வந்தனர். ஆகாஷ் தனது சித்தப்பாவின் இறைச்சி கடையில் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில் பழனிச்சாமி, ஜெயலட்சுமி, இருவரையும் கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என போலீஸ்காரருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில், பழனிச்சாமி & ஜெயலட்சுமியை, இரைச்சி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து, உடல் பாகங்களை மூன்று சாக்கு பைகளில் மூட்டையாக கட்டி, ஏரிகளில் வீசியதாக ஆகாஷ் ஒப்புக்கொண்டார். இதற்கு ஜெயலட்சுமி மகளும் உடந்தையாக இருந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஏரிகளுக்கு சென்று உடல் பாகங்களை மீட்டனர்.
ஆகாஷ் கைது செய்யப்பட்டு, போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் “நாங்கள் நாலு பேரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தோம். எனது தந்தை, சித்தி மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதை என் தங்கை ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். கடந்த 15ஆம் தேதி இரவு, எனது தந்தை மீண்டும் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றார். அதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த நான், அவரை கீழே தள்ளி விட்டேன். அந்த நேரத்தில் அங்கு வந்த எனது சித்தி, ஏன் அவரை அடிக்கிறாய்? என்று கேட்டார். மேலும் என்னை அடிக்க பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், இறைச்சி வெட்டும் கத்தியால், தனது தந்தையும் சித்தியும் வெட்டி கொலை செய்தேன். அவர்களின் தலை, கை, கால்களை தனித்தனியாக பிரித்து, எனது தங்கையுடன் சேர்ந்து சாக்குப்பையில் போட்டு, ஏகப்புறம் & தாழையூர் ஏரிகளில் வீசினேன். அக்கம் பக்கத்தினர் தந்தை, சித்தி எங்கே? என்று விசாரித்த பொழுது, அவர்கள் வெளியூர் வேலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தேன்” என்று தனது வாக்குமூலத்தில் கூறினார்.
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…