#image_title
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் முத்துராமன். 60 களிலும் 70 களிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திறமையான நடிகராக இருந்தாலும் முத்துராமன் பெரும்பாலும் பல படங்களில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தார். இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, மூன்று தெய்வங்கள், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் இன்றும் நினைவில் நிற்பவை.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என பலரோடும் இணைந்து நடித்துள்ளார். 500க்கும் மேறப்ட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார் முத்துராமன். 1929ம் ஆண்டு 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர். இவருக்கு நவரச திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
70 களின் இறுதியில் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லாத போது வில்லன் வேடத்திலும் துணிந்து நடிக்க ஆரம்பித்தார். ரஜினியின் போக்கிரி ராஜா அவர் அப்படி வில்லனாக நடித்துக் கலக்கிய படத்தில் ஒன்று. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்குக்காக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் போக்கிரி ராஜா படத்தில் அவரைப் போன்ற வேறொருவரை வைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கினார்கள்.
இந்நிலையில் முத்துராமனுக்கு திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம்தான். அந்த படத்துக்கு முன்பே முத்துராமன் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரை ஒரு முக்கிய நடிகராக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து நாடகங்களிலேயே நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் நண்பரான கோபாலகிருஷ்ணன் எப்படியாவது முத்துராமனுக்கு ஒரு நல்ல படத்தில் நல்ல வேடத்தை வாங்கிக் கொடுக்க வேண்டுமென பல முயற்சிகளை மேற்கொண்டாராம்.
அப்போதுதான் ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அதனால் அந்த படத்தில் முத்துராமனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக முத்துராமன் நடிக்கும் ஒரு நாடகத்தைப் பார்க்க ஸ்ரீதரை அழைத்துள்ளார்.
அந்த நாடகத்தினைப் பார்த்த ஸ்ரீதர், முத்துராமனின் நடிப்பால் கவரப்பட்டு, தானாகவே தான் எடுக்கும் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில அவரை இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக்கினாராம். அது முத்துராமனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்து அவரை முன்னணி நடிகராக்கியது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…