சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் போலீசிடம் வம்புக்கு இழுத்து ஸ்டேஷனில் அமர்ந்திருக்கிறார் முத்து. மனோஜ் அனைவரிடமும் அடி வாங்கி கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் வந்து முத்துவை கண்டிக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டரிடம் எல்லாம் பேசிவிட்டு வெளியே வரும்போது மனோஜ் பல பேரிடம் அடிவாங்கி இருப்பார் அதற்கு என்ன காரணம் என்று ஒரு கேட்கிறார். அவரும் முத்து காதில் சொல்கிறார். அவனை அடிச்சது தப்பே இல்லை சார் என்று கூறிவிட்டு செல்கிறார். அடுத்ததாக மீனா என்னனு கேட்கும்போது அவர் காதிலும் கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்கும் பாட்டி தாத்தாவை பார்க்க முத்து மீனா செல்கின்றனர். அப்போது அந்த பாட்டி தாத்தா ஊரில் இருக்கும் பேரன் என்பவர் வந்து பார்த்து நான் கூட்டிட்டு போறேன் நான் பாத்துக்குறேன் என்று கூறுகிறார். முத்துவும் சரி பாட்டி தாத்தா நல்லபடியா போய்ட்டு வாங்க நாங்க அடிக்கடி உங்களை வந்து பார்க்கிறோம் என்று கூறி போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அடுத்ததாக வித்யா விட்டு சென்ற முத்துவின் போனை அந்த தாத்தா கையில் கொடுத்து ஒரு பொண்ணு போன விட்டுட்டு போயிருச்சு நீ பார்த்து கொடுத்துடு என்று கொடுத்து இருக்கிறார். உடனே சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் முத்து.
வீட்டிற்கு சென்றவுடன் அண்ணாமலை விஜயா எல்லாரையும் கூப்பிட்டு இந்த மனோஜ் போலீஸ்ல அடி வாங்கிட்டு வந்தான் என்று கூறுகிறார். அடுத்ததாக அண்ணாமலை ஏண்டா என்ன பிரச்சனை நீ எதுக்கு அடி வாங்கினே என்று கேட்கும் போது மனோஜ் கூறிய விஷயத்தை அண்ணாமலை காதில் கூறுகிறார் முத்து. கடைசி வரை அவர் என்ன கூறினார் என்று நமக்கு தெரியாது. அதுவரைக்கும் கோபப்படாத அண்ணாமலையே மனோஜை அடித்து விட்டார். இனிமேல் இந்த மாதிரி பண்ற வேலைய வச்சிருக்காதே என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
அடுத்ததாக ரூமுக்கு சென்று தாத்தா கொடுத்த போனை எடுத்து பார்க்கும்போது மீனா இது உங்க போனதாங்க என்று முத்துவிடம் கூறுகிறார். ஆமா என் போன் எப்படி அவங்க கைல போச்சு என்று பேசிக்கொண்டிருக்கும்போதே முத்து நேராக வீட்டுக்குள் போய் அண்ணாமலை விஜயா ஹாலில் இருக்கிறார்கள் அவர்களிடம் என் போனுக்கு கிடைச்சிருச்சு பாருங்க என்று கூறிக் கொண்டிருக்கிறார். உடனே விஜயா மனோஜ் பணம் கிடைக்கல இவன் பொருள் எல்லாம் கிடைக்குது என்று கூறுகிறார். உடனே முத்து நல்லவங்க பொருள் எல்லாம் உடனே கிடைச்சிரும் என்று கூறுகிறார். இதை ரோகினி ரூமில் இருந்து கேட்டு வித்யாவின் மீது கோபம் அடைந்து டென்ஷன் ஆகிறார்.

உடனே வித்யா வீட்டிற்கு சென்ற ரோகிணி முத்து போனை நீ என்ன செஞ்ச என்று கேட்கும் போது வித்யா சமாளிக்கிறார். நீ வந்து மிஸ் பண்ணிட்ட கடல்ல போடல என்று கேட்கும் போது ஆமா எங்கயோ தெரியாம மிஸ் ஆயிடுச்சு என்று கூறுகிறார் வித்யா. உடனே ரோகினி உனக்கு இது ஒரு வேலை கூட செய்ய முடியாதா இப்படி பண்ணி இருக்க என்று ரோகினி திட்டும்போது வித்யாவுக்கு கோபம் வந்து விடுகிறது. என்ன நீ என் மாமியார் மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்க நான் ஒன்னும் நீ வச்சா ஆள் கிடையாது உன் வேலைக்காரி கிடையாது என்று கூறுகிறார். நீ என்கிட்டயே பொய் சொல்லிட்ட அதுதான் கேட்கிறேன் என்கிறார் ரோகினி. நீ இதுவரைக்கும் யார்கிட்டயும் பொய் சொன்னதே கிடையாதா உன் புருஷன் உன் குடும்பத்துக்கிட்டே நீ பொய் சொல்லிட்டு இருக்க நாளைக்கு நீ என்கிட்டையே பொய் சொல்லமாட்டனு என்ன நிச்சயம் என்று சண்டையிடுகிறார். உனக்காக நான் வந்து இங்கு கிடையாது உன்னால தான் நான் பொய் சொல்லிட்டு இருக்கேன் என்று சண்டையிட்டு கொள்கின்றனர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
