அதிமுகவுக்கு பெரிய ஆப்பு வைத்த ஸ்டாலின்… திமுக பக்கம் மொத்தமாக திரும்பிய முத்தரையர் சமுதாயம்… அரசியலில் யாரும் எதிர்பார்க்காத பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

அதிமுக ஆதரவு முத்தரையர் சமுதாய ஓட்டுக்களை வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக கைப்பற்றும் என சர்வே மூலம் தெரிய வந்துள்ளதால் திமுக மகிழ்ச்சி அடைந்துள்ளது. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முத்தரையர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியதும் முத்தரையர் ஓட்டுக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தது. பல மாவட்டங்களில் அதிமுக தொடர் வெற்றிகளை குவித்தது. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாவிற்கு முத்தரையர் சமுதாய ஓட்டுகள் சேர்ந்தன.

ஜெயலலிதா இருக்கும் வரை அவர்களுடைய ஓட்டுக்களை கைப்பற்ற கருணாநிதியால் முடியவில்லை. இதனிடையே பழனிச்சாமி முதல்வரான பிறகு அதிமுகவில் முத்தரையர் வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது. சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியை 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கைப்பற்றியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முத்தரையர் சமுதாய ஓட்டுக்களை கவரும் வேலைகளை ஸ்டாலின் தொடங்கினார். இந்நிலையில் திமுக தலைமை எடுத்த தொடர் முயற்சியால் ஜெயலலிதா அறுவடை செய்த முத்தரையர் ஓட்டுகள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு கணிசமாக கைமாறும் என்று ரகசிய சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. இந்தச் செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.